2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பத்திரிகை நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் பொலிஸில் ஒப்படைப்பு

Princiya Dixci   / 2016 மே 19 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகை நிறுவனமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த புலனாய்வாளர்கள் என தம்மை அறிமுகப்படுத்திய இருவரை, அந்நிறுவன ஊழியர்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மேற்படி பத்திரிகை நிலையத்தில் புதன்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, மேற்குறிப்பிட்ட நபர்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் உள்நுழைந்த, அஞ்சலி செலுத்தியவர்களைப் புகைப்படம் எடுத்துள்ளனர். 

இதனை அவதானித்த அங்குள்ள ஊழியர்கள், அவ்விருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

அதில் ஒருவர் சிங்கள மொழி பேசியதுடன், மற்றவர் தமிழில் கதைத்துள்ளார். 

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டு, அவர் பத்திரிகை நிறுவனத்துக்கு வருகை தந்ததையடுத்து, பிடிக்கப்பட்ட இருவரும் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .