Editorial / 2020 ஜனவரி 08 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசந்த்
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சந்தித்து, வடக்கில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, யாழ்ப்பாணத்திலுள்ள ஆயர் இல்லத்தில், இன்று (08) நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய ஆளுநராகக் கடந்த வாரம் கடமைகளைப் பொறுப்பேற்ற பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நேற்று (08), தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக, ஆயரிடம் ஆசி பெற்றுக்கொள்ளும் வகையிலேயே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026