Gavitha / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
கடும் வெய்யிலுடன் கூடிய காலநிலையின் காரணமாக வல்லை பரவை கடலில் நீர் வற்றியுள்ளதால் பரவை கடலினை நம்பி சிறுமீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டமனாறு கடல் நீர் ஏரிக்கு குறுக்காக நன்னீர் திட்ட அணை கட்டப்பதன் பின் கடல் நீர் அணைக்கட்டில் இருந்து மறுபுறத்துக்கு வருவது தடைப்பட்டது.
இதனால், இக்கடலினை நம்பி சிறு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மாரிகாலத்தில் கிடைக்கும் நீரை நம்பியே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெய்யிலுடன் கூடிய காலநிலையால் வல்லை பரவைக்கடல் நீரேரி வற்றி காணப்படுகிறது.
இக்கடலினை நம்பி அன்றாட ஜீவனோபாயத்தினை கொண்டு நடத்தும் அச்சுவேலி, வல்லை, புத்தூர் மற்றும் தொண்டமானாறு பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago