2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கல்விக் காப்புறுதித் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகக் கேட்போர் கூட்டத்தில், இன்று (28) நடைபெற்றது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 90 மாணவர்களுக்கு 5,000 தொடர்க்கம் 50,000 ரூபாய் வரையிலான புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

அத்துடன், தேசிய பாதுகாப்புச் சபையின் காப்புறுதித் திட்டத்தை சரியான முறையில் செயற்படுத்திய 67 அரச உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .