2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புவனேஸ்வரனின் பயணத்துக்கு இராணுவத்தினர் முட்டுக்க​ட்டை

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

 

கேப்பாப்புலவு பிரதான வழியூடாகப் பயணித்த, வட மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரனை, இராணுவத்தினர் இடைமறித்துத் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று  (22) பிற்பகல், கேப்பாப்புலவு பிரதான வழியூடாக, புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே, அவர் இவ்வாறு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினரின் உறவினர்கள் பயணிக்கும் இந்த வீதியால், மாகாணசபை உறுப்பினர்கள் பயணிக்க இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர். இதன் மூலம், இராணுவத்தினரின் அடாவடித்தனம் இன்று வெளிச்சமாகியுள்ளது. இவ்வாறான செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

“மேலும், இவ்வாறு மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் இராணுவத்தினர் தமது அதிகாரத்தைப' பிரயோகித்துள்ளதன் மூலம், இலங்கையின் நீதிச்சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .