2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் கைப்பை அபகரிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

திக்கம் மாணான்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் கைப்பையை, பற்றைக்குள் மறைந்திருந்தவர்கள் செவ்வாய்க்கிழமை (29) இரவு அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பையில் இருந்த அலைபேசி, 3,000 ரூபாய் பணம், சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியன இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியில் கொத்துரொட்டிக் கடை நடத்தும் மேற்படி பெண், கடையை மூடிவிட்டு வீடு செல்கையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X