George / 2016 மார்ச் 19 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு 3 மாதகால கடூழியச் சிறைத்தண்டனை மற்றும் 7,500 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 1 வருடத்துக்கு அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தையும் இரத்துச் செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன், வெள்ளிக்கிழமை (18) தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் மேற்படிநபர் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
தான் மதுபோதையில் வாகனம் செலுத்தவில்லை ஆகையால், தான் சுத்தவாளியென அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருந்தும், அவர் மதுபோதையில் வாகனம் செலுத்திச் சென்றமை தொடர்பில் பொலிஸார், பதிவு செய்த பரிசோதனைச் சான்றைக் காட்டிய நீதிவான், இதில் நீங்கள் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே? எனக்கேட்டார்.
இதற்கு பதிலளித்த சந்தேகநபர், தான் பிடிபடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே மது அருந்தியதாகவும் பொலிஸார் பிடிக்கும் போது தான் மதுபோதையில் இல்லையெனவும் கூறினார்.
இவ்வாறு பொய் கூறியமையால் ஆத்திரமடைந்த நீதிவான் பொய்கூறிய நபருக்கு 3 மாதகாலங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026