2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பொல்லால் தாக்குதல்: சகோதரர்களுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2016 மார்ச் 29 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை வியாபாரி மூலைப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் பொல்லால் தாக்கி அவர்களை காயப்படுத்திய  இரு சகோதரர்களை, எதிர்வரும் 1 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.

பழைய பகைமையைத் தீர்ப்பதற்காக கடந்த 25ஆம் திகதி, வியாபாரி மூலைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மேற்படி இருவரும், வீட்டிலிருந்த மூவரையும் பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் இ.ராஜ் (வயது 47), ரா.சரோஜினிதேவி (வயது 42), ரா.ரஞ்சித் (வயது 17) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X