2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

Sudharshini   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

அலைபேசி மூலம் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞனை, திங்கட்கிழமை (18) இரவு கைதுசெய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றிற்கு தீ வைத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அண்மையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரின் சகோதரன், அலைபேசி மூலம் பொலிஸாரை தொடர்புகொண்டு சகோதரனை கைது செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனையடுத்தே, அச்சுறுத்தல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .