2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மீட்டல் வகுப்புகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

க.பொ.த சாதாரண தர ஆங்கில இலக்கியப் பாடப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின்  நலன் கருதி,  பிரிட்டிஷ்  கவுன்சிலின் யாழ்ப்பாணக் கிளை ஏற்பாட்டில், மீட்டல் வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இதற்கமைய, இந்த மீட்ல் வகுப்புகள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (22, 23)  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை யாழ்ப்பாணம்  சென். ஜோன்ஸ் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, ஒரு பாடத்துக்கு 1,000 ரூபாய் வீதம் அறவிடப்படும். அத்துடன், மூன்று பாடங்களுக்கானப் பதிவுகளை மேற்கொள்ளும்போது, மேலதிகமாக ஒரு பாடத்திட்டத்துக்கு 1,000 ரூபாய் பெறுமதியான நுழைவுச்சீட்டை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

நுழைவுச் சீட்டுகளை பிரிட்டிஷ் கவுன்சிலில் அல்லது நிகழ்வு நடைபெறும் தினம் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப மண்டபத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

பங்குபற்ற விரும்புவோர், பிரிட்டிஷ் கவுன்சிலின் யாழ்ப்பாணக் கிளை 0217521521 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .