2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மூதுரையையே பேஸ்புக்கில் பதிவிட்டேன்

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

ஔவையாரின் மூதுரையையே தான் பேஸ்புக்கில் பதிவிட்டதாகத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானாந்த், அதனை யாரேனும் தவறாகப் பொருள்கோடல் செய்து மனம் வருத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக்கோருவதாகவும் கூறினார்.

வியாழக்கிழமை (09) நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகரசபையின் மாதாந்த அமர்வில், சாதி தொடர்பில் சபையில் பேசி முரண்பட்டுக்கொண்டார்கள் எனும் குற்றசாட்டு தொடர்பில் விளக்கமளிக்கு முகமாக, யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று  (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பேஸ்புக்கில் தனது தனிப்பட்ட கருத்தையே பகிர்ந்ததாகவும் அதுவும்  ஔவையாரின் மூதுரையையே பகிர்ந்ததாகவும் கூறினார்.

சபை அமர்வுகளில் தனிப்பட்ட விடயங்களோ அல்லது பேஸ்புக்கில் எழும் விமர்சனங்கள், பேஸ்புக் பதிவுகள் தொடர்பில் பேச வேண்டாம்  என யாழ்ப்பாணம் மாநகர சபை மேயரால் பல முறை அறிவுறுத்தப்பட்ட போதும், அன்றைய தினம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் பேஸ்புக் பதிவு தொடர்பில் பிரஸ்தாபித்ததாகவும் அதன் பின்னரே, அது கருத்து முரண்பாடாக மாறியதெனவும் கூறினார்.

ஆனாலும், தனது கட்சியான புளொட்டின் தலைமை ஊடாக இச்சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தை தனது கட்சி தலைமையிடம் மிக விரைவில் கையளிப்பதாகவும், தர்சானாந்த் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .