2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாட்டுடன் மோதுண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Gavitha   / 2016 ஜூலை 10 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

முல்லைத்தீவு, உன்னப்புலவு பகுதியில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின் போது படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (09) உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கள்ளப்பாடுப் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரன் துஸ்யாதரன் (வயது 31)  என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

தனது பணிகளை முடித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்த நபர், மோட்டார் சைக்கிளை மாட்டின் மீது மோதியதால், படுகாயமடைந்தார்.

இதன்போது அவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .