2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மாடு மிதித்து வயோதிபர் பலி

Princiya Dixci   / 2016 மார்ச் 31 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மண்டைதீவுச் சந்தியில் விபத்து ஒன்றில் கீழே வீழ்ந்த வயோதிபரை மாடு மிதித்ததில் அவர் அந்த இடத்திலேயே பலியாகிய சம்பவம், நேற்று புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டைதீவு, நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சூசைப்பிள்ளை றீரபிள் (வயது 60) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் றீரபிள் ஜெயச்சந்திரன் (வயது 31) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

தந்தையும் மகனும் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, வீதியால் குறுக்கே பாய்ந்த மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதி குடைசாய்ந்தது. குறுக்கே பாய்ந்து சென்ற மாடு மறுகரையில் வேலி இருந்தமையால் மீண்டும் மறுபக்கம் செல்ல முற்பட்ட போது, முச்சக்ரவண்டியிலிருந்து கீழே வீழ்ந்து கிடந்த வயோதிபரை மிதித்துச் சென்றுள்ளது. இதில் வயோதிபர் உயிரிழந்தார்.

சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X