2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மாணவனின் செயலால் அரசின் மனோநிலை மாறாது

George   / 2015 நவம்பர் 27 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்படவேண்டும் என கோரிக்கை முன்வைத்து, ரயிலின் முன் பாய்ந்து உயிரிழந்த இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவனின் மரணம், அரசாங்கத்தின் மனோநிலையை மாற்றும் என தான் நம்பவில்லையெனவும், இவ்வாறான துன்பகரமான செயல்களில் எவரும் ஈடுபடவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கடிதம் ஒன்றை எழுதி வைத்த பின்னர் மாணவன் தனது உயிரை மாய்த்திருந்தார்.

இந்தச் செயல் மிகவும் துன்பகரமானதாகும். இவ்வாறான செயல்களில் எவரும் ஈடுபடவேண்டாம். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டங்கள் நடத்த வேண்டும், ஆனால், இவ்வாறு செய்யக்கூடாது. அரசாங்கம் இதனைச் சொல்லிக்காட்டக்கூடும்' என முதலமைச்சர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .