2021 ஜனவரி 23, சனிக்கிழமை

யாழில் 1, 557 பேர் டெங்கால் பாதிப்பு

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்ததுடன், 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வழமை போன்று மழை காலம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, டெங்கு நோய் தாக்கம் இம்முறையும் அதிகரித்துள்ளது.

இவ்வருடத்தில், இதுவரை யாழ். மாவட்டத்தில் மட்டும் டெங்கு நோயாளர்கள் 3 ஆயிரத்து 854 பேர் இனம் காணப்பட்டதுடன், கடந்த ஒக்டோபர் மாதம் 537 பேரும் இம்மாதம் நடுப்பகுதிவரை 1,020 பேர் இனம் காணப்பட்டனர்.

டெங்கு நோய் தொடர்பில், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்டத்திலுள்ள பிரதேச சுகாதார பணிமனைகளுக்கும் டெங்கு நோய் முன்னெச்சரிக்கை தொடர்பில் சகல அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் டெங்கு நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதுடன் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .