2021 மே 06, வியாழக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக மாணவிகளுக்கு புதிய விடுதி திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகளுக்காக 110 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 3 தளங்களைக் கொண்ட விடுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டது.

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோகன் லால் கிரேரோ, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து இக்கட்டடத் தொகுதியை திறந்து வைத்தனர்.

இவ்விடுதியில் 230 மாணவிகள் தங்கி கல்வி கற்பதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .