2021 மே 06, வியாழக்கிழமை

யாழில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும் போது இவ்வருடம் குறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய சம்பவங்கள் 2013 ஆம் ஆண்டு 54 ஆகவும், 2014 ஆம் ஆண்டு 50 ஆகவும் இருந்தது. 2015 ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் 13 சம்பவங்களே இடம்பெற்றுள்ளது.

அதேபோல், இளவயது கர்ப்பம் மற்றும் சிறுவர் திருமணம் போன்றவை 2013 ஆம் அண்டு 124 சம்பவங்களும், 2014 ஆம் ஆண்டு 83 சம்பவங்களும் இடம்பெற்றிருந்ததுடன், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 29 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறுவர் துஸ்பிரயோகங்கள் 2013 ஆம் ஆண்டு 71 சம்பவங்களும், 2014 ஆம் ஆண்டு 61 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 27 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டச் செயலகம் மற்றும் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகலும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 123 சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியிருந்ததுடன், 2014 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து 196 சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகினர். ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் 39 சிறுவர்களே பாடசாலைகளிலிருந்து விலகியுள்ளனர் என மாவட்டச் செயலகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .