2021 மே 08, சனிக்கிழமை

யாழில் ஹர்த்தால் வதந்தி

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்;கிழமை (28) தொடக்கம் புதன்கிழமை (30) வரை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வெளியாகிய தகவலினால் குழப்ப நிலையொன்று ஏற்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கிகரிக்க வேண்டும் எனக்கோரி, மக்கள் சக்தி என்ற அமைப்பினர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகள் நடைபெறாமல், பஸ் சேவைகளை நிறுத்தியும், ஆலயங்களில் பூசை வழிபாடுகள் மேற்கொள்ளாமலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் என அந்த அமைப்பு கூறியிருந்ததாக வதந்திகளை பரப்பியிருந்தமையால் மக்கள் குழப்பமடைந்தனர்.

எனினும், யாழ்ப்பாணத்தில் அனைத்துச் செயற்பாடுகளும் வழமைபோல இயங்கி வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X