Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
ஆட்சி மாற்றத்தின் பின்னர், வடக்கின் பல பகுதிகளிலும் உள்ள வீதிகளில் பொலிஸார், இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு, வீதித் தடைகளை ஏற்படுத்தி, கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் வீதியில் பயணிக்கின்றவர்கள் பெரும் அசளகரியங்களுக்கு உள்ளாவதுடன், இச்சோதனை நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார் இந்நிலையில், இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் கூடுதல் அதிகாரங்கள், ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, வடக்கு மாகாணத்தின் பிரதான வீதிகள் உட்பட்ட பல வீதிகளில், வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள், மாவீரர் தினம் நடைபெறவுள்ள நிலையிலேயே, திடிரென இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பாதுகாப்புக் கருதி, இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அரச தரப்பில் கூறப்பட்டாலும், அந்தச் சோதனைகள் பொதுமக்கள் மத்தியில் அசௌகரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
32 minute ago
42 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
42 minute ago
49 minute ago
1 hours ago