Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஐ.நேசமணி
வடமாகாண சுகாதாரத்துறையில் பெரும்பாலான தலைமை அதிகாரிகளுக்குரிய பதவிகள் நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தாய்ச்சங்க உபசெயலாளர் வைத்தியர் பா.சாயிநிரஞ்சன் கூறுகையில்,
வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் பெரும்பாலான உயர் அதிகாரிகளுக்கு நீண்ட காலமாக வெற்றிடங்கள் நிலவுவதால் நிர்வாக ரீதியாக பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் பதவி, யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவி போன்ற முக்கிய பதவிகள் வைத்திய சிரேஷ்ட நிர்வாக தர தகுதி வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படாமையினால் வேறு அதிகாரிகளினால் தற்காலிக பதில் கடமை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பதவி என்பனவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் பதவி, மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பதவி என்பனவும் மன்னார் மாவட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பதவி என்பனவற்றிக்கும் பதில் கடமை அதிகாரிகளே கடமையாற்றுகின்றனர்.
எதிர்வரும் காலங்களில் மேற்படி வடமாகாண சுகாதாரத்துறை தலைமைப் பதவிகளுக்கு நிரந்தர வைத்திய சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரிகளை நியமித்து சுகாதார சேவைகளை மேம்படுத்துமாறு சுகாதார அமைச்சை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
29 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago