2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வடமராட்சியில் 3 பாடசாலைகளுக்கு விடுமுறை

George   / 2016 மே 17 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட மூன்று பாடசாலைகள், செவ்வாய்க்கிழமை (17) இயங்கவில்லை என வலயக்கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை, ஹாட்லி கல்லூரி மற்றும் அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளே இயங்கவில்லை.

கடற்கரையை அண்மித்த வகையில் இந்தப் பாடசாலைகள் அமைந்திருப்பதாலும் கடற்கரையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், பாடசாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் எனக்கருதி இந்த மூன்று பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

காலநிலை சீரானதும், இந்தப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .