Kogilavani / 2016 மே 23 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
வட மாகாண சபை தயாரித்த அரசியல் தீர்வுத் திட்டம், எதிர்க்கட்சிக் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம், சனிக்கிழமை (21) மாலை கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரை, அவருடைய அலுவலகத்தில் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து, இந்தத் தீர்வுத் திட்டத்தை கையளித்தனர்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பில், வடக்குவாழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும்
உள்வாங்கப்படும் வகையில், வடக்கு மாகாண சபை, 19 பேர் கொண்ட குழு ஒன்றின் ஊடாக, தமிழ் பேசும் மக்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்திருந்தது.
இந்தத் தீர்வுத் திட்டமானது, கடந்த மாதம் 16ஆம் திகதி, எதிர்க்கட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டபோதும் அது பின்னர் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் கடந்த மாதம் 30ஆம் திகதி கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டபோதும் கையளிக்கப்படாத நிலையில், மாகாண சபையில், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் முறுகல் நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026