2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வீட்டில் வைத்து மதுபானம் விற்றவர் கைது

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மருதங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து மதுபானப் போத்தல்களை விற்பனை செய்த நபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர், அதே பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர்.

பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார் 180 மில்லிலீற்றர் கொள்ளளவு உடைய 14 மதுபானப்போத்தல்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கைதானவருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .