2021 ஜனவரி 20, புதன்கிழமை

விவசாயிகளுக்கு பசளை பொதிகள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2016 ஜூலை 14 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

விமானப் படையினரின் கட்டளை நலன்புரித் திட்டத்தின் ஊடாக 100 விவசாயிகளுக்கு தலா 10 கிலோகிராம் எடையுள்ள இயற்கை பசளை அடங்கிய பொதிகள் பலாலி விமானப் படைத்தளத்தில் வைத்து வியாழக்கிழமை (14) வழங்கப்பட்டன.

'இரசாயனக் கிருமிநாசினிகளிடமிருந்து விவசாயத்தையும், மனித வாழ்வையும் பாதுகாப்போம்' எனும் திட்டத்தின் கீழ், விமான படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை பசளை பொதிகளே இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கொழும்பு கட்டுநாயக்க இராணுவ முகாமின் நலன்புரி கட்டளை பணியகத்தின் விவசாயப் பிரிவின் அதிகாரிகளால் நிலத்தடி நீரைப் பாதுகாத்தல், மண்வளத்தை பாதுகாத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.   

இயற்கையுடன் மனிதன் எவ்வாறு ஒத்துவாழ வேண்டும், இயற்கை பசளையினால் உற்பத்தியை அதிகரிப்பதுடன் பொருளாதாரத்தை எவ்வாறு மேலும் அதிகரிக்கலாம், இயற்கை பசளையை எவ்வாறு வீட்டில் உற்பத்தி செய்யலாம் என்பது தொடர்பிலும் இதன்போது விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் இறுதியில்,  20 பேருக்கு மரக்கறி விதைகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .