2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ரூ.12 கோடியில் காலாசார மண்டபம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 03 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி, எஸ்.கே.பிரசாத்)

இந்திய அரசாங்கத்தினால் யாழில் 12 கோடி ரூபாவில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு விரைவில் இடம்பெறுமென்று யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இன்று தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். யாழ். முற்றவெளி பகுதியில் 5 மாடிக் கட்டிடத் தொகுதியுடன் அமைக்க தீர்;மானித்த நிலையில், 5ஆவது மாடியினை இந்திய அரசாங்கம் தமக்கு தருமாற கோரியிருந்தது.

5ஆவது மாடியினை வழங்க மறுத்தவேளை கலாசார மண்டபம் அமைப்பது குறித்தும், அதன் கட்டிட தீர்மானங்கள் சம்பந்தமாக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னர் கலாசார மண்டபம் அமைக்க தீர்மானித்துள்ளனர்.

இதன்பிரகாரம் சில பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 5 மாடி கட்டிடத்தினை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது. அந்த நிலையில் விரைவில் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறுமென்று அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .