Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து வைத்தியர்களாக வெளியேறுவோர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இரண்டு வருடங்கள் சேவையாற்றியதன் பின்னரே இடமாற்றம் பெறமுடியும் என்ற புதிய நடைமுறை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இத்தகவலைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
இதன் மூலம் எமது பகுதிகளில் நிலவும் வைத்தியர்களுக்கான பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.
யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து வைத்தியர்களாக வெளி யேறுவோர் ஒருவருட காலம் தமது பகுதிகளில் சேவை புரிந்ததன் பின்னர் தமக்கு விரும்pய இடங்களுக்கு இடமாற்றம் செய்து கொள்ள முடியும் என்ற நடைமுறையே இதுவரையும் உள்ளது.
இதன் காரணமாக வைத்தி யர்களுக்கான பற்றாக்குறை அதிகமாக இருந்தது. ஒரு வருட சேவையை இரண்டு வருடங்களாக அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் வைத்தியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியும் என மத்திய சுகாதார அமைச்சிடம் கேட்டு வந்தோம்.
எனினும் இதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. தற்போது அந்தச் சங்கம் தமது அனுமதியை வழங்கியுள்ளது.
அதனை அடுத்தே மத்திய சுகாதார அமைச்சு புதிய நடை முறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.
அதன் பிரகாரம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இந்தப் புதிய நடை முறை அமுலுக்கு வருகிறது. இதன்மூலம் எமது மக்கள் அதிக நன்மைகளைப் பெறக் கூடியதாக இருக்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
37 minute ago
59 minute ago