2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

யாழ். குடாநாட்டில் இ.போ.ச பஸ் சேவையை சீர்செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

குடாநாட்டில் இ.போ.ச பஸ் சேவையை சீர்செய்வது தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், வடபிராந்தியப் போக்குவரத்துச்சபை முகாமையாளர் கணேசபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

பருத்தித்துறையிலிருந்து புறப்பட்டு பலாலி வீதியூடாக யாழ். நகரை அடையும் 764ஆம் இலக்க பயண மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்து சேவை கடந்த மூன்று வாரங்களாக சீரற்றதாக அமைந்ததால் அதிருப்தியுற்ற பயணிகளால் ஆர்ப்பாட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டதுடன்,   ஆளுநருக்கு மகஜரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாகவே கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

செல்வச்சந்நிதி ஆலயத் திருவிழாவுக்காக விசேட பேருந்துச் சேவையை நடத்த வேண்டிய நிலை  ஏற்பட்டதாலேயே இவ்வாறு குறித்த பயணச் சேவையில் தடங்கல் ஏற்பட்டதாகவும் இனி இவ்வாறான தடங்கல் ஏற்படாது என்றும் கலந்துரையாடலின்போது இ.போ.ச தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--