2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

நல்லூரில் பெண்களை வெட்டிவிட்டு பணம் நகை கொள்ளை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

நல்லூர் ஆலய சுற்றாடலுக்கு அண்மையாக உள்ள வைமன் வீதியிலுள்ள வீடொன்றில்  தனிமையாக வசித்த பெண்களை வாளினால் வெட்டி காயப்படுத்திவிட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் மற்றும் சுமார் பத்து பவுன்களுக்கு மேற்பட்ட நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு நல்லூர் வைமன் வீதியில் இடம்பெற்றுள்ளது. இரவு நேரம் வீட்டினுள் நுழைந்து ஆயுதம் தாங்கிய குழுவினர் தனிமையிலிருந்த பெண்கள் மூவரையும் பயமுறுத்தி கொள்ளையிட முற்பட்ட்ய்ள்ளார்கள். இரு பெண்கள் எதிர்க்கவே அவர்களை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்கள். வாள்வெட்டுக்கு உள்ளாகிய  நிலையில் காயங்களுடன் கே.பரமேஸ்வரி வயது 60 மற்றும் உறவினரான எஸ்.ரேனுகா வயது 24 என்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஆலயச் சுற்றாடலில் கடைகள் அமைப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் காணப்பட்ட வேளையில் இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--