2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குடாநாட்டில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ். குடாநாட்டில் அருகிவரும் பசும்பால் மற்றும் உற்பத்தி சந்தை வாய்ப்பு பாவனை ஆகியவற்றை அதிகரிக்கும் வகையிலான கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கிறீன்கிராஸ் விடுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, கால்நடைத் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளை கொழும்பிலிருந்து செல்லவுள்ள இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் டபிள்யூ.எம்.கருணாரட்ன உட்பட அதிகாரிகள் அடங்கிய குழு சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.

இதன்போது, குடாநாட்டின் பால்த் தேவையை பூர்த்தி செய்வதற்கான அபிவிருத்தித் திட்டங்கள் புதிய முதலீடுகள், ஏற்றுமதி வாய்ப்புக்கள், நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தல், கால்நடையாளருக்கு மானியம் வழங்குதல் என்பன குறித்து ஆராயப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X