Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
தேசிய பாதுகாப்பு தினம் இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் இந்நிகழ்வை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முடிவெடுக்கும் கலந்துரையாடல் யாழ்.செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது அனர்தத முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிலையப் பணிப்பாளர் நந்தரட்ண அடங்கிய குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்பட்டு வரும் இந்நிகழ்வு காலி, இரத்தினபுரி, கண்டி, குருநாகல் ஆகிய இடங்களில் வருடா வருடம் தொடர்ந்து இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கமைப்பதற்கென 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் தொடர்பான விடயங்கள் பொலிஸ், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய தரப்பினரிடம ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அடுத்த கூட்டம் அடுத்தமாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
12 minute ago
1 hours ago
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
22 Nov 2025
22 Nov 2025