2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

முச்சக்கர வாகனம் மோதி வயோதிபப் பெண் பலி

Super User   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (சங்கவி)

யாழ். நகரில் முச்சக்கர வாகனம் மோதியதால் வயோதிபப் பெண்ணொருவர் இன்று பலியானார். 81 வயதான விநாயகமூர்த்தி சிவயோகம் என்பவரே பலியானவர் ஆவார்.

நல்லூர் ஆலயத்திற்குச் சென்றுவிட்டு முச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர், ஸ்ரான்லி வீதியில் அவ்வாகனத்திலிருந்து இறங்கியபோது, பின்னால் வந்த மற்றொரு முச்சக்கர வாகனத்தினால் மோதப்பட்டு படுகாயமடைந்தார்.

இன்று மாலை 4.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--