2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

உணவகம் பூட்டப்பட்டதால் நோயாளர் அவதி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் நோயாளர்களின் நலன் கருதி செயற்பட்டு வந்த உணவகம் கடந்த 16 ஆம் திகதி முதல் பூட்டப்பட்டிருப்பதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். போதனா வைத்தியசாலையில் குறித்த உணவகம் இதுவரை காலமும் இயங்கி வந்த கட்டடத்தினைப் புனரமைப்பதற்காகவே மேற்படி உணவகம் பூட்டப்பட்டுள்ளது.

எனினும், உணவகத்தை தற்காலிகமாக வேறொரு இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு இன்னும் சில தினங்கள் செல்லும் என்றும் தெரியவருகின்றது.

உணவகம் பூட்டப்பட்டதால் உணவுப் பொருள்கள், சுடுதண்ணீர், சத்துணவுகள் என்பவற்றைப்  பெறுவதற்கு நோயாளர்களும் அவர்களின் உறவினர்களும் வைத்தியசாலைக்கு வெளியே உள்ள கடைகளுக்கே செல்ல  வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--