Super User / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு பாடசாலைச் சமூகத்தினரும் பெற்றோரும் பல்வேறு தரப்பினரிடையேயும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக அவர்கள் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மகாண ஆளுநர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு மகஜர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் வ.ஸ்ரீகாந்தனைத் திடீர் இடமாற்றம் செய்வதற்கு எடுக்கப்படும் விடயம் அறிந்து கல்லூரியின் மாணவர்களும் பழைய மாணவர்களும் மற்றும் பெற்றோரும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளோம்.
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியானது எமது கிராமத்துக்கு ஆரோக்கியமானதாகவே உள்ளது. இதன் வளர்ச்சிக்கு தற்போதைய அதிபரின் பங்களிப்பு காத்திரமானது.
பல்வேறு கட்டமைப்புகள் கொண்ட இந்த அதிபரின் நிர்வாகச் செயற்பாடுகள் கட்டுக்கோப்பானது. அவரது நிர்வாகத் திறனில் கல்லூரி பல்வேறு வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது.
இந்நிலையில் அதிபரின் திடீர் இடமாற்றமானது ஒரு சமூகத்தை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச்செல்வது போன்ற ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது.
எனவே இந்த அதிபரின் இடமாற்றம் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.- என்று உள்ளது.
35 minute ago
43 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
6 hours ago
21 Dec 2025