2025 ஜூலை 12, சனிக்கிழமை

மருதனார்மடம் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து

Super User   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி) 

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் தனியாருக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று புதன்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று தீப்பற்றிக் கொண்டது.

இதனையடுத்து ஊழியர்கள் உடனடியாக எடுத்த தீயணைப்பு நடவடிக்கையால் பாரியளவு பாதிப்புகள் எவையும் இடம்பெறாது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் பணிகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .