Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
சாவகச்சேரி நகர் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உடல் நலத்துக்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டில் குறித்த வெதுப்பக உரிமையாளருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 7 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இயங்கிவரும் குறித்த வெதுப்பகத்தில் உடலுக்கு ஒவ்வாத விதத்தில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டமை மற்றும் களஞ்சியப்படுத்தியமை தொடர்பாக குறித்த வெதுப்பக உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதாரப் பரிசோதகரினால் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த புதன்கிழமை சாவகச்சேரி பொது சுகாதாரப் பரிசோதகரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக குறித்த வெதுப்பகத்தில் உடல் நலத்துக்கு ஒவ்வாத விதத்தில் உணவு தயாரிக்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி ஏன்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த வெதுப்பக உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து நீதிபதி 7ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தார்.
29 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago