2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு அபராதம்

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரமும் இன்றி வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் 7 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்துள்ளது.

வேலணை 4ஆம் வட்டாரத்தில் மதுபோதையில் அனுமதிப்பத்திரமும் இன்றி வாகனம் செலுத்திய நபரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மோட்டார் வாகனக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்து ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் அஜர் செய்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி 7 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் குறித்த தொகையைக் கட்டத் தவறினால் 3 மாதங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--