Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
தென்னிலங்கையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் யாழ். குடாநாட்டுக்கு வர்த்தகர்களினால் எடுத்துவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இத்தகைய பொருட்களை கொள்வனவு செய்யும் யாழ். வர்த்தகர்கள் உரிய தர நிர்ணயக் குறியிட்டையும் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் பெயர்களையும் உரிய முறையில் பார்வையிட்டு கொள்வனவு செய்யும்படி யாழ். வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ். வணிகர் கழக அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம், உபதலைவர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம், செயலாளர் ஆர்.ஜெனக்குமார் உபசெயலாளர் எஸ்.சிவகுமார் பொருளாளர் க.ஜெயராசா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கருத்துத் தெரிவித்த வணிகர் கழகம்,
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருந்தகங்கள் மருந்துப் பொருட்களின் சில்லறை விலையை வெளிப்படுத்த வேண்டும். இது கொள்வனவாளர்களுக்கு உதவியாகவும் பிரச்சினைகளை ஏற்படுத்தாமலும் இருக்கும்.
குறிப்பிட்ட விலைக்கு மேல் எந்தவொரு பொருளையும் யாரும் விற்பனை செய்ய முடியாது. இதனையிட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருந்து விலையைப் பார்த்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்.
இதேபோன்று ஏற்கெனவே குறிப்பிட்ட விலையின் மேல் புதிய விலைகளை அடித்து ஒட்டி விற்கும் செயல்பாடுகளும் கூட இடம்பெறுவதாக பாவனையாளர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இத்தகைய பொருட்களை கொள்வனவு செய்யாது விடும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தகாலங்களைப் போன்று யாரும் செயல்பட முடியாது. தற்போது தென்னிலங்கையில் இருந்து வரும் பரிசோதனைக் குழுவினரும் கூட பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அனைத்து வியாபாரிகளும் உரிய முறையில் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் மரக்காலைகளை நடத்துபவர்கள் உரிய முறையில் யாழ்ப்பாணம் காட்டுக் கந்தோரில் உரிய பதிவுப் படிவங்களைப் பெற்று தமது தொழில் நிறுவனங்களை இந்தாண்டு இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று ஏனைய மரத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவாகளும் கூட தமது தொழில்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் பல மருந்தகங்கள் மருந்தாளர்கள் இன்றி செயல்பட்டு வருகின்றது. இந்நிலமை தொடர்ந்து காணப்பட முடியாது. உடனடியாக மருந்தாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மருந்தாளர்களை பெற முடியாது போனால் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டால் உரியவர்களை நியமிக்க ஆவன செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago