Super User / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொத்தணி முறையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றபோதிலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் போதியளவில் இல்லை என்று வடமராட்சி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட செம்பியன்பற்று அ.த.க. பாடசாலையில் மாமுனை றோ.க.த.க. பாடசாலையும், செம்பியன்பற்று றோ.க.த.க. பாடசாலையும் ஒரு கொத்தணியாகவும் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை, தாளையடி றோ.க.த.க பாடசாலை ஆகியன மற்றொரு கொத்தணிப் பாடசாலையாகவும் இயங்கத் தொடங்கியுள்ளன.
இவற்றில் முதலில் ஆரம்பமாகிய செம்பியன்பற்று அ.த.க.பாடசாலை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டன.
கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ள இப்பாடசாலைகளை இயங்கவைக்க வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்துக்கு யுனிசெவ் நிறுவனம் வழங்கிய தற்காலிக கொட்டகை உடுத்துறை மகா வித்தியாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 பாடசாலைகளுக்குமான தளபாட வசதிகளை வடமராட்சி வலயம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இங்கு குடிதண்ணீர், வசதிகள் மலசலகூட வசதிகள் என்பன பெரும் பிரச்சினையாகவே உள்ளன. அவற்றைத் தீர்த்து வைக்கவும் மாணவர்களுக்கு ஏனைய அடிப்படை வசதிகளை எற்படுத்திக் கொடுக்கவும் பொது அமைப்புகள் முன்வரவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
40 minute ago
51 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago
54 minute ago
1 hours ago