2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் தாமதமாகும்: யாழ். அரச அதிபர்

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் வடக்கில் மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்போதிலும் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில் மீள்குடியேற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

வலி. வடக்கில் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என அண்மையில் அமைச்சர் பஸில் தெரிவித்திருந்தார். அதற்கமைய நாளை இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் கண்ணிவெடி முழுமையாக அகற்றப்படாமையால் மீள்குடியேற்றத்தை ஒத்திவைக்க நேரிட்டதாகவும் வெகுவிரைவில் இதற்கு தீர்வு காணப்படும் எனவும் யாழ். அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

நாளை யாழ்ப்பாணம் வரும் அமைச்சர் பஸில், வடபகுதியின் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். அரியாலைப் பகுதியில் ஏர்பூட்டும் நிகழ்வில் கலந்து கொள்ளும் அவர் பின்னர் திருநெல்வேலியில் உள்ள விவசாயத் திணைக்களத்தில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் பங்குபற்றுவார். அத்தோடு வசாவிளானில் பாடசாலை ஒன்றினையும் திறந்துவைக்கவுள்ளார்.

வடமராட்சி கிழக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--