2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

யாழில் 3 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை இன்று (29)  உயிரிழந்துள்ளது.

குறித்த பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிறந்துள்ளது.

இன்றைய தினம் குழந்தையின் தாயார் குழந்தைக்கு பாலூட்டிய சிறிது நேரத்தில் அந்த குழந்தை திடீர் சுகவீனமுற்றுள்ளது.

இதனையடுத்து அந்த குழந்தையை பெற்றோர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X