2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஆனைக்கோட்டை உயரப்புலம் குணபாலன் வித்தியால பொன்விழா

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(நவம்)
 
ஆனைக்கோட்டை உயரப்புலம் குணபாலன் வித்தியாலயத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவுப் பொன்விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மண்டபத்தில் அதிபர் என்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் ஆசியுரைகளை ஆனைக்கோட்டை உத்துங்க விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. குகதாசக்குருக்கள், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு. திருமுருகன் ஆகியோர் வழங்கினர்.
 
இதனைத் தொடர்ந்து வாழ்த்துரைகளை சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கந்தசாமி, வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் ஆகியோர் வழங்கினர்.
 
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவதுறை பீடாதிபதி க.தேவராசா வெளியீட்டுரையை நிகழ்த்தி நூலினை  வெளியிட்டு வைக்க முதல் பிரதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில் அதிபர் மாணிக்கம் சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

altaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--