A.P.Mathan / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளைச் செய்வதற்கு ஜனாதிபதி செயலக அனுமதியினைக் கட்டாயம் பெற வேண்டுமென அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் பணியாற்றுகின்ற உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றபோதே மேற்படி அறிவித்தல் வழங்கப்பட்டது.
இதன்போது அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், குறித்த காலங்களில் செய்து முடிக்கப்பட வேண்டும் எனவும், தமது வேலைத்திட்டங்களில் நிரந்தர வீடுகள், தற்காலிக வீடுகள், தண்ணீர் வசதிகள், வாழ்வாதாரத் திட்டம் போன்றவைகளை செய்வதற்கு தெளிவான விளக்கம், சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
24 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago