2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

டொக்டர் வீட்டில் திருட்டு: சந்தேகத்தில் பெண் கைது!

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

டொக்டர் ஒருவர் வீட்டில் இடம் பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக குறித்த டொக்டரின் வீட்டின் ஒரு புறத்தில் தொலைபேசி நிலையம்  நடத்தும் இளம் பெண் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து திருட்டுப் போன பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

மானிப்பாய், சுதுமலைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றது.  டொக்டரின் வீட்டில் இருந்து சுமார் ஆறு லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் இருபதாயிரம் ரூபா பணம் என்பனவே திருடப்பட்டு இருந்தன. இது சம்பந்தமாக வைத்தியர் மானிப்பாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த பெண்ணில் சந்தேகம் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நகைகள் மற்றும் பணம் பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்டன.

அத்துடன் பொலிஸாரினால் குறித்தபெண் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .