Super User / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பிரிவுக்கு ஆளாணிப் பற்றாக்குறை நிலவுவதால் இங்கு கடமைகளை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி கே. ரட்ணசூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரிவில் 2 சட்ட வைத்திய அதிகாரிகள் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர்.
அதுமட்டுமன்றி கணினி உள்ளபோதிலும் கணினி இயக்குநர் ஒருவர் இங்கு இல்லாமை பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது. தட்டச்சாளர் ஒருவர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார். இதனால் தரவுகளைச் சேகரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது- என்றார்.
55 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025