Super User / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகத்திலுள்ள ஜேர்மன் கலாசார நிலையமானது யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான வைபவம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றபோது அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை ஜேர்மனிய கலாசார நிலையப் பணிப்பாளர் பிஜோன் கெட்டல்ஸ் இடமிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நூல்களைப் பெற்றுக் கொண்டார்.
ஜேர்மனிய கலாசார நிலையப் பணிப்பாளர் பிஜோன் கெட்டல்ஸ் இதில் உரையாற்றுகையில்:
பிரசித்திபெற்ற யாழ்.பொது நூலகத்திற்கு நூல்களை வழங்குவதில் ஜேர்மன் அரசின் சார்பாக எனது மகிழ்ச்சிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஓர் ஆரம்பமே எதிர்வரும் காலங்களில் வருடந்தோறும் இரண்டாயிரம் யூரோ பெறுமதியான நூல்களை யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார நிலையமானது தொடர்ச்சியாக அன்பளிப்புச் செய்யும்.- என்றார்.
அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களுக்காக மட்டுமல்லாமல் வடபகுதி மக்கள் மீது ஜேர்மனிய அரசாங்கமும் மக்களும் காட்டும் அக்கறை குறித்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.- என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்ட நூல்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாநகர முதல்வரிடம் கையளித்த அதேவேளை முதல்வர் அந்நூல் தொகுதியினை யாழ்.பிரதம நூலகர் எஸ். தனபாலசிங்கத்திடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஜேர்மன் கலாசார நிலைய நூலகர் டானியல் ஸ்டோல், நிகழ்ச்சித் திட்டப்பணிப்பாளர் திருமதி பவுசியா, யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.சரவணபவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.



52 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
5 hours ago