2020 நவம்பர் 25, புதன்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தை சிறப்புற முன்னேற்ற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். பல்கலைக்கழகத்தை நல்ல திசைநோக்கி முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் தற்போது எட்டிவரும் நிலையில் இவ்வாறான சந்தர்ப்பங்களை ஒழுங்குமுறையில் சரிவரப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும் எனவும் யாழ். பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும் எனவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இன்று பிற்பகல் யாழ். பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக்கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தை ஒருசிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும் என்பதை இங்கு சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளிவிடாமல் எமது பண்பாட்டு, கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொண்டு இப்பல்கலைக்கழகத்தை எமது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் முன்னேற்ற நாம் அனைவரும் தயாராக வேண்டும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--