2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சர்வதேச முதியோர், மாற்று வலுவுள்ளோர் தினவிழா

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக சர்வதேச முதியோர் மாற்று வலுவுள்ளோர் தினவிழா கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு  பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபரும் முன்னாள் வடக்கு கிழக்கு கரையோர சமுதாய மீள் அமைப்புத் திட்டப் பணிப்பாளருமான வே.வீரகத்திப்பிள்ளையும் சிறப்பு விருந்தினர்களாக சாந்திகம் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.வி.சங்கரப்பிள்ளை, தியாகி அறக்கொடை நிறுவன உப தலைவர் வி.சுந்தரமூர்த்தி, கரவெட்டி ஸ்ரீ பரமானந்தா ஆசிரம தலைவர் திருமதி செல்வி சறோஜா தம்பு ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--