Menaka Mookandi / 2010 நவம்பர் 03 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெடுந்தீவிலிருந்து வடமேற்குக் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் பதினொரு பேரை கடற்படையினர் மீட்டதாக கடற்படையின் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.
குறித்த மீனவர்கள் பயணித்துக்கொண்டிருந்த மூன்று படகுகளின் என்ஜின்கள் செயலிழந்த நிலையில் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்த போதே கடற்படையினரால் மீட்கப்பட்டதாகவும் அவர்களது படகுகள் கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு நெடுந்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த மீனவர்கள் பயணித்த படகுகள் கடற்படையினரால் திருத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். (SD)
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025