2025 ஜூலை 12, சனிக்கிழமை

யாழ். செல்லும் வடபகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் துண்டுபிரசுரம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 03 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் தென்னிலங்கையை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும் முகமாக இராணுவத்தினரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜல் ஜெனரல் மஹிந்த ஹந்துருசிங்கவின் ஆலோசனைக்கமைய இந்த துண்டு பிரசுரங்களை ஆனையிறவில் வைத்து தென்னிலங்கை பயணிகளுக்கு இராணுவத்தினர் விநியோகிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பிரசித்தமான இடங்கள் பற்றிய விபரங்கள், பாதைகளின் விபரங்கள், பாதுகாப்பு நடைமுறைகள், கலாசார விடயங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .