Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 07 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
தெல்லிப்பளை, இளவாலை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் பலாலி காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட மக்கள் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயனடைய முடியும் என காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் எட்வின் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் சேவையில் கடந்த காலத்தில் தேசிய அடையாள அட்டைகளை தவறவிட்டவர்கள், சாரதி அனுமதிப்பத்திரத்தை தொலைத்தவர்கள், பிறப்பு இறப்பு பத்திரங்கள் வழங்குதல், காலம் கடந்த பிறப்பு இறப்பு பதிவுகளை மேற்கொள்ளுதல் உட்பட சிறுகுற்றங்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை பதிந்து உரிய முறைப்பாட்டுப் பிரதிகள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைவிட பொதுமருத்துவம் , நீரிழிவு இரத்தப் பரிசோதனை உட்பட மற்றும் பல சேவைகளும் வழங்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago